சமீபத்தில் வார இதழ்களில் படித்த செய்தி.
****** ஊரில் தனிமையில் இருந்த காதலர்கள் மற்றும் திருமணமான ஜோடிகளை சில காமுகர்கள் தாக்கி அந்த (சுமார் 30) பெண்களை கற்பழித்து விட்டதாகவும் சமிபத்தில்தான் அவர்கள் (4 இளைஞர்கள்) கைது செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளியிடபட்டிருகின்றன.
இதற்கு காவல்துறையினர் சொல்லும் காரணம். பாதிக்கப்பட்டவர்கள் புகார் செய்யாமல் நாங்கள் யார் மீதும் நடவடிக்கை எடுக்கமுடியாது என்பதே.
எனவே பாதிக்கபட்டவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது:
குடும்ப மானம் மற்றும் தங்கள் பெண்ணின் எதிர்காலம் கருதி நடந்த சம்பவத்தை மறைக்க விரும்புவது நியாயமானதே. ஆனால் இப்படி ஒரு சம்பவம் நடந்ததையும் மற்றும் குற்றம் நிகழ்ந்த இடம், குற்றவாளிகள் பற்றி தங்களுக்கு தெரிந்த தகவல்களையும் குறைந்த பட்சம் அனோமதேய கடிதமாக காவல் துறையினருக்கு தெரிவிப்பதுதான் நல்லது. அப்போதுதான் அவர்கள் அந்த பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும் முடியும் அல்லது பிற பெண்களையாவது இந்த ஆபத்திலிருந்து காப்பாற்ற முடியும்.
காவல்துறையின் மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால், இந்த கடிததின் நகலை அந்த பகுதியை சேர்ந்த பொதுநல இயக்கங்களுகோ அல்லது நிஜமாகவே மக்கள் பிரச்சினைகளுக்காக போராடகூடிய சில அரசியல் கட்சியின் அலுவலகங்களுக்காவது அனுப்பி வைக்கலாம்.
தங்கள் பெண்ணின் எதிர்காலம் குறித்து கவலைபடுபவர்கள், இப்படி இவர்கள் மூடி மறைப்பதினால் அந்த பகுதியில் இருக்கும் ஆபத்தை அறியாமல் மேலும் பல பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகி கொண்டிருப்பார்கள் எனபதை உனரவேண்டும்.
உண்மையிலேயே பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை கட்டுபடுத்த வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு இருக்குமேயானால், இதுபோன்ற வழக்குகள் முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்பட வேண்டும். மேலும் in camere முறையில் நடத்தப்படவேண்டும். இந்த செய்திகள் பத்திரிக்கையில் வெளியாவதை அரசு தடை செய்தால், பெண்கள் தைரியமாக சாட்சி சொல்ல முன்வருவார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment